thirandaal-midukku-logo
thirandaal-midukku-logo
Current Project

பகிர் மகிழ் திட்டம்

திரண்டால் மிடுக்கு, அனைவருடனும் இணைந்து, அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் “பகிர் மகிழ்” திட்டத்தை ஒருங்கிணைந்து நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இன்றைய உலகில் நாம் மேற்கொள்ளும் இயற்கைச் சமநிலையை பாதிக்கும் செயல்களால் பெரும் அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இந்த அழகிய பூமி, நாம் வாழ்ந்து முடித்து அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்புடன் கையளிக்க வேண்டிய சொந்த வீடு போன்றது. நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால், இந்த எதிர்மறை தாக்கங்களை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த முடியும்.

“குறை – மீண்டும் பயன்படுத்து – மறுசுழற்சி செய்” என்பது கழிவு மேலாண்மையின் அடிப்படை வரிசையாகும்.
இதில்,

  • வளங்களை குறைவாக பயன்படுத்துதல்
  • பொருட்களை முடிந்தவரை மீண்டும் பயன்படுத்துதல்
  • இறுதியாக மறுசுழற்சி செய்தல்

என்பவை வலியுறுத்தப்படுகின்றன. இதன் மூலம் குப்பை மேடுகளில் சேரும் கழிவுகள் குறைகின்றன, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன, ஆற்றல் சேமிக்கப்படுகிறது, மேலும் மாசுபாடு குறைக்கப்படுகிறது.

இந்த மூன்று கோட்பாடுகளில் “மீண்டும் பயன்படுத்து” என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதே “பகிர் மகிழ்” திட்டம் ஆகும்.

திட்டத்தின் நோக்கம்:- நாம் பயன்படுத்தியுள்ள நல்ல நிலையில் உள்ள பொருட்களையும், மேலதிகமாக உள்ள தரமான பொருட்களையும், சமுதாயத்தின் சிறந்த பயன்பாட்டிற்கு வழங்குதல்.

திட்டத்தின் செயற்பாடுகள்

1. கிடைக்கப்பெறும் பொருட்களை, மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இலவசமாக வழங்குதல்.

2. ஏழை மக்களும் சுயகௌரவத்துடன் தரமான பொருட்களை மிகக் குறைந்த விலையில் பெறக்கூடிய நிலையங்களை உருவாக்குதல்.

3. பொது பயன்பாட்டிற்கான வழங்கல்
கணனிகள் மற்றும் இதர பெறுமதிமிக்க சாதனங்களை

  • விற்பனை செய்யாமல்
  • பொது தேவைக்காக பயன்படுத்துதல்

உதாரணமாக:

  • பாடசாலைகள்
  • கல்வி நிலையங்கள்
  • நூலகங்கள்

4. தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல்
அதிகமாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல்.

உதாரணமாக:

  • தையல் மையங்கள் – (துணிகள்)
  • முன்பள்ளிகள் – (விளையாட்டுப் பொருட்கள்)
  • வாசகசாலைகள் – (புத்தகங்கள்)
  • தொழில்கல்வி நிலையங்கள் – (மடிக்கணனிகள்)

5. சேமிப்பில் உள்ள பொருட்களை, அனர்த்த காலங்களில் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக வழங்குதல்.

தற்போது இணைந்துள்ள நிலையங்கள்

  1. யாழ்ப்பாணம்
  2. முல்லைத்தீவு
  3. மட்டக்களப்பு
  4. நுவரெலியா
  5. மாத்தளை

பொருட்கள் அனுப்புதல் தொடர்பாக

  • நீங்கள் இந்த நிலையங்களுக்கு நேரடியாகவோ அல்லது பொதிகளாகவோ பொருட்களை அனுப்பலாம்.
  • அனுப்பிய பொருட்களின் விபரங்களை, அந்த நிலையத்தின் மின்னஞ்சலுக்கும் திரண்டால்மிடுக்கு மின்னஞ்சலுக்கும் (tmshareandrejoice@gmail.com)அனுப்புதல் அவசியம்.
  • ஒவ்வொரு நிலையமும் பெற்றுக்கொண்ட பொருட்களுக்கு பற்றுச்சீட்டை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கும்.
  • நீங்கள் வழங்கிய பொருட்களின் பயன்பாட்டை எமது இணையதளத்திலும், நேரடியாகவும் பார்வையிட முடியும்.

பகிர்வோம் – மகிழ்வோம் – பாதுகாப்போம்.

 

Share and  Rejoice Project

Thirandal Midukku, in collaboration with various partners, is working to collectively implement the “Share and Rejoice “project across all Tamil regions.

In today’s world, human activities that disrupt the balance of nature are leading to major disasters. This beautiful Earth should be cared for like our own home, which we live in and responsibly hand over to the next generation. If we all act together, we can prevent the rapid intensification of these negative impacts.

“Reduce – Reuse – Recycle” is the fundamental hierarchy of waste management. This emphasizes:

  • Reducing the use of resources
  • Reusing items as much as possible
  • Finally, Recycling materials

Through this approach, waste sent to landfills is reduced, natural resources are conserved, energy is saved, and pollution is minimized. Among these three principles, the “Reuse” concept forms the foundation of the Share and Rejoice Project.

Objective of the Project

To provide society with beneficial use of good-quality items that we have already used or that are available in excess.

Project Activities

1. Providing available items free of charge to people, based on an understanding of their living conditions.

2. Establishing centers where economically disadvantaged people can obtain quality goods at very low prices with dignity.

3. Providing items for public use
Computers and other valuable equipment will be:

  • Not sold
  • Used solely for public purposes

Examples include:

  • Schools
  • Educational institutions
  • Libraries

4. Creating employment opportunities
Using surplus items to create livelihood opportunities.

Examples include:

  • Sewing centers – (fabrics)
  • Preschools – (toys)
  • Reading rooms – (books)
  • Vocational training centers – (laptops)

5. Supplying stored items immediately to areas in need during times of disaster.

Currently Participating Centers

  1. Jaffna
  2. Mullaitivu
  3. Batticaloa
  4. Nuwara Eliya
  5. Matale

Regarding the Sending of Items

  • You may send items directly or as packages to these centers.
  • Details of the items sent must be emailed to both the respective center’s email address and the Thirandal Midukku email address.
  • Each center will issue and send a receipt via email for the items received.
  • You will be able to view how your donated items are being used through our website and in person.

Share – Rejoice – Protect.

Project Gallery