Shop TM is live. Visit the marketplace to buy from Tamil women–led businesses.
Shop TM இப்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்ப் பெண்கள் நடத்தும் தொழில்களின் பொருட்களை வாங்க எங்கள் கடைக்குச் செல்லுங்கள்.
திரண்டால் மிடுக்கு, தமிழ்ப் பெண்கள் நடத்தும் தொழில்களுக்கு உதவுவதற்காக, வணிக இணையத்தளத்தை வழங்குகிறது. இந்த தளத்தின் மூலம் பெண்கள் தங்கள் தயாரிப்புகளை நியாயமான விலையில் விற்பனை செய்து, வெளிநாட்டு சந்தைகளையும் அடைய முடியும். இதனால் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, குடும்பங்களை சிறப்பாக கவனிக்க தேவையான வருமானத்தைப் பெறக்கூடியதாக இருக்கும்.
இலங்கையின் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையக தமிழ்ப் பெண்கள் பலருக்கு நிலையான சந்தைவாய்ப்புகள் இல்லை. அதனால் அவர்கள் தங்கள் தயாரிப்புக்களை குறைந்த விலையில் விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. திரண்டால் மிடுக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வாக வணிக இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் தங்கள் தொழில்களை வளர்த்துக் கொள்ளவும் மரியாதையுடன் நியாயமான வருமானத்தைப் பெறவும் உதவுகிறது.
Thirandal Midukku supports Tamil women–led businesses through an online marketplace where women can sell their products at fair prices. Through this platform, women can reach international markets, earn stable incomes, and better support their families.
The project focuses on women most in need, especially Tamil female heads of households in Sri Lanka’s Northern, Eastern, and Up-Country regions. Thirandal Midukku addresses this challenge through an online marketplace that helps women grow their businesses and earn a fair and dignified income.