Thirandal Midukku: A non-profit organisation founded on the belief that coordinated networking can reduce inefficiencies arising from fragmented efforts by Tamil organisations and individuals working independently on socio-economic issues in Sri Lanka and diaspora communities.
திரண்டால் மிடுக்கு: இலங்கை, மற்றும் உலகளாவிய புலம்பெயர் சமூகங்களில் உள்ள, சமூக-பொருளாதார பிரச்சினைகளைக் கையாள, தனித்தனியாக செயல்படும் தமிழ் அமைப்புகள், மற்றும் தனிநபர்களின் சிதறிய முயற்சிகளால் ஏற்படும், செயல்திறன் குறைபாடுகளை, ஒருங்கிணைந்த வலையமைப்பு மூலம், குறைக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிறுவப்பட்ட ,ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு.
Thirandal Midukku, coordinates charity and social-enterprise–based initiatives for Northern, Eastern, and Hill Country Tamils in Sri Lanka and across the global diaspora. It enables these efforts by connecting global donors, charitable organisations, supporters, individual beneficiaries, and beneficiary organisations.
திரண்டால் மிடுக்கு, இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கான ,தொண்டு மற்றும் சமூக நிறுவன அடிப்படையிலான திட்டங்களை, ஒருங்கிணைக்கும் ஒரு மேடையாக செயல்படுகிறது. உலகளாவிய நன்கொடையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆதரவாளர்கள், தனிப்பட்ட பயனாளிகள் மற்றும் பயனாளி அமைப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம் இந்த முயற்சிகளை சாத்தியமாக்குகிறது.
To empower everyone to save time and resources by collaborating, sharing knowledge, and supporting one another—so that every project is not just completed, but completed successfully and with impact.
ஒவ்வொருவரும் இணைந்து செயல்பட்டு, அறிவைப் பகிர்ந்து, ஒருவருக்கொருவர் ஆதரவு வழங்குவதன் மூலம், நேரத்தையும் வளங்களையும் சேமித்து, ஒவ்வொரு திட்டமும் வெற்றிகரமாகவும், தாக்கமுடனும் முடிக்கப்படுவதை ஊக்குவிப்பது தான் எங்களின் நோக்கம்.
திரண்டால் மிடுக்கு என்பது 2022 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்திலும், 2025 ஆம் ஆண்டில் இலங்கையிலும் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஆதரவும் வலுவும் வழங்குவதற்காக, உலகின் பல பகுதிகளில் தனித்தனியாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் தனிநபர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் திரண்டால் மிடுக்கு உருவாக்கப்பட்டது.
பல அமைப்புகளும் தனிநபர்களும் ஏற்கனவே சிறந்த பணிகளை செய்து கொண்டிருந்தாலும், இலங்கையிலுள்ள அமைப்புகள், வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள் மற்றும் தமிழர்களுக்கு உதவும் தனிநபர்கள் ஆகியோருக்கிடையிலான வலுவான இணைப்பு, சமூக–பொருளாதார மேம்பாட்டை மேலும் சிறப்பாக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
ஒவ்வொரு அமைப்பும் மற்றும் தனிநபரும் தங்களது சுயாதீனத்தையும் தனித்த நோக்கங்களையும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில், அர்த்தமுள்ள ஒத்துழைப்பை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
மனிதர்களையும் அமைப்புகளையும் இணைப்பதன் மூலம், நாங்கள்:
• சமூக திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த
• அனுபவங்களை பகிர்ந்து கொள்ள
• அறிவும் வளங்களும் பகிர்ந்து கொள்ள
• உதவிகளை ஒருங்கிணைந்து வழங்க
• நேரமும் செலவுகளும் சேமிக்க
உதவுகிறோம்.
திரண்டால் மிடுக்கு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்களை பின்வரும் வழிகளில் இணைக்கிறது:
• WhatsApp குழுக்கள்
• Zoom சந்திப்புகள்
• தொலைபேசி உரையாடல்கள்
• நேரடி சந்திப்புகள்
இந்த வழிகளின் மூலம், அனைவரும் அறிவைப் பகிர்ந்து கொண்டு, கூட்டாண்மைகளை உருவாக்கி, தங்களது தனித்தன்மையும் சுயாதீனமும் காக்கப்பட்ட நிலையில், பொதுவான இலக்குகளை அடைய ஒன்றிணைந்து செயல்பட முடியும்.
• திருமதி ஆ கௌரி
• செல்வி மு லக்சினி
• திரு சீ தேவதாஸ்
• செல்வி த தசினா
• செல்வி ஆ லக்சுமி
• திரு ஆ வளவன்
• திரு த தயாபரன்
• செல்வி சி வைஷ்ணவி
Thirandal Midukku is a non-profit organisation registered in the United Kingdom in 2022 and in Sri Lanka in 2025.
Thirandal Midukku was established to connect charities, community organisations, and individuals operating independently across different parts of the world, who support and empower Tamils living in Sri Lanka.
While many organisations and individuals are already carrying out impactful work, we believe that stronger connections between organisations in Sri Lanka, organisations abroad, and individuals supporting Tamils can further enhance socio-economic development.
We encourage meaningful collaboration while respecting the independence and unique objectives of each organisation and individual.
By connecting people and organisations, we aim to:
• Deliver community programmes more effectively
• Share experiences
• Share knowledge and resources
• Coordinate aid efforts more efficiently
• Save time and money
Thirandal Midukku connects charities, organisations, and individuals through:
• WhatsApp groups
• Zoom meetings
• Phone discussions
• Face-to-face meetings
Through these platforms, participants can share knowledge, build partnerships, and work together towards common goals while maintaining their individual identities and independence.
• Ms A Gowri
• Ms M Laxsini
• Mr S Devadas
• Ms T Thasina
• Ms A Laxsumi
• Mr A Valavan
• Mr T Thayaparan
• Ms S Vaishnavi
2025 Thirandaal Midukku. All rights reserved.
Powered by CEYMPLON
2025 Thirandaal Midukku. All rights reserved.
Powered by CEYMPLON
